செவ்வாய், 23 ஜூன், 2026

இறந்த தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து நகையைத் திருடிய மகன், கூட்டாளிக்கு வலைவீச்சு !!!

SHARE

 இறந்த உடலைத் தோண்டி எடுத்து நகையைத் திருடிய உறவினர் மகன், கூட்டாளிக்கு வலைவீச்சு !!!

கோவை, சௌரிபாளையம், பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் குமார் (வயது 32). இவரது தந்தை நாகராஜ் உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 6-ஆம் தேதி இறந்தார். உறவினர்கள் அவரது உடலை சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்தனர். அப்போது நாகராஜின் கழுத்தில் மீன் டாலர் பதிக்கப்பட்ட 3¼ பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டு இருந்தது. உடல் புதைக்கப்படும் போது நாகராஜின் மற்றொரு மகனான சக்திவேலும் அங்கு இருந்து உள்ளார்.

இந்த நிலையில், தந்தையின் 16-ஆம் நாள் காரிய சடங்கிற்காகப் புதைகுழியைத் தூய்மை செய்ய வெங்கடேஷ் குமார் கடந்த 19-ஆம் தேதி மயானத்திற்குச் சென்றார். அப்போது புதைகுழி தோண்டப்பட்டு, மீண்டும் மண்ணால் மூடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் சந்தேகம் அடைந்த அவர், மயானத்தில் வழக்கமாகத் தூங்கும் கார்த்தி என்பவரிடம் விசாரித்தார்.

விசாரணையில், கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவில் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் மயானத்திற்குள் புகுந்து, நாகராஜின் உடலைத் தோண்டி எடுத்து, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைத் திருடியது தெரியவந்தது. மேலும், அந்தச் சங்கிலியைப் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் விற்று உருக்கியதும் தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சக்திவேல் மற்றும் மணிகண்டனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: