வெள்ளி, 26 ஜூன், 2026

ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் மலரும் ‘பிரம்மக்கமலம்’ பூக்கள் ; ஒரே செடியில் பூத்து குலுங்கல் – பக்திப் பெருக்குடன் ஆரத்தி எடுத்த குடும்பத்தினர்!

SHARE

ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் மலரும் ‘பிரம்மக்கமலம்’ பூக்கள் ; ஒரே செடியில் பூத்து குலுங்கல் – பக்திப் பெருக்குடன் ஆரத்தி எடுத்த குடும்பத்தினர்!

கோவை சின்னத்தடாகம் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மக்கமலம் என்னும் நிஷாகந்தி பூ கனகராஜ் மகேஷ்வரி என்பவரது வீட்டில் 24 பூக்கள் பூத்துள்ளது. அதற்கு அவர்கள் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர். இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆவலுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

கோவை சின்னத்தடாகம் வடக்கு வீதி பகுதியில் உள்ள கனகராஜ் மகேஷ்வரி என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மக்கமலம் என்னும் நிஷாகந்தி பூச்செடியை வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அச்செடியில் 24 பிரம்மக்கமல பூக்கள் பூத்துள்ளது. இதையடுத்து அவ்வீட்டார் அந்த பூவிற்கு கற்பூரம் காட்டியும் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து இரவில் மட்டுமே மலர்ந்து காலையில் வாடிவிடும் பிரம்மகமல பூவை பார்த்துச் செல்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: