புதன், 10 ஜூன், 2026

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் பாரதிராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி !!!

SHARE

 மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் பாரதிராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி !!!

பாரதிராஜா குழந்தையை போன்றவர் என்றும், அவர் மனதில் என்ன நினைத்தாலும் வெளிப்படையாக பேசுவார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்து உள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ என்று அழைக்கப்படும் பாரதிராஜா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் பாரதிராஜா உடலுக்கு திரைத்துறையினர் பலர் நேரில் சென்று அஞ்சலி 

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 

“பாரதிராஜா என்னுடைய 50 ஆண்டு கால நண்பர். அவரது திறமை, சாதனைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். திரைத்துறையில் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி அவர்களை திரையுலகத்தில் வாழ வைத்தவர். அதுமட்டுமின்றி திரைத்துறையினருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து போராடியவர். அவருடைய பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

தனிப்பட்ட முறையில் குழந்தையை போன்றவர் பாரதிராஜா. அவர் மனதில் என்ன நினைத்தாலும் அதை வெளிப்படையாக பேசுவார். என்னைப் பற்றி நிறைய விமர்சனங்களை முன் வைத்து உள்ளார். உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் உனது நடிப்பை எனக்கு பிடிக்காது என்று கூறி உள்ளார்.

அவருடன் இருந்தாலே மகிழ்ச்சியாக இருக்கும். அவரது வெளிப்படைத் தன்மையான குணத்தாலேயே எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி கணேசன் போன்றோருடன் நட்பாக இருந்தார். அவர் உயிருடன் இருக்கும் போது, அவரை பார்க்க வேண்டும் என கேட்ட போது, அவர் குணம் அடைந்து விடுவார்; அப்போது வாருங்கள் என கூறினார்கள். ஆனால் இப்போது அவரை உயிருடன் பார்க்க முடியவில்லை. அவர் என்றென்றும் எனது நினைவில் இருப்பார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என தெரிவித்தார். 

ரஜினியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் அவர்களது திரை வாழ்வில், அடுத்த கட்டத்திற்கு செல்ல முக்கிய பங்காற்றின. பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் வில்லத்தனம் கலந்த சைக்கோ கதாபாத்திரம் அவரது திரை வாழ்க்கையில் முக்கியமானதாக அமைந்தது. அதேபோல் ‘16 வயதினிலே’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பரட்டை’ கதாபாத்திரம் அவரது திரை வாழ்வில் மைல்கல்லாக அமைந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் உடல் மொழி இன்றளவும் பேசப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: