பா.ஜ.க வில் இருந்து தனி நபர்கள் செல்வதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை... வெளியே சென்றவர்கள் திரும்பி வருவார்கள் வானதி சீனிவாசன் நம்பிக்கை...
மின்வாரியத்தில் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் தமிழக வெற்றி கழகம் யாரையோ காப்பாற்ற முயற்சி செய்கிறது... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு !!!
பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால மக்கள் சேவை, நல்லாட்சி மற்றும் வளர்ச்சிப் பயணத்தை சிறப்பிக்கும் நிகழ்வு மற்றும் சர்வதேச யோகா தின விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இதனையொட்டி பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
இந்தியாவிலேயே அதிகமான நாட்கள் (4,200 நாட்கள்) பிரதமராக இருந்து பிரதமர் மோடி சாதனை படைத்து உள்ளார். 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை 23 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளார். 11 கோடிக்கு மேற்பட்ட கழிப்பறைகள், கேஸ் சிலிண்டர்கள் என கோடிக் கணக்கான மக்களுக்கு நேரடியாக சென்றதால் மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்.
ரயில் நிலையம், விமான நிலையம் உள்பட அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து உள்ளது. விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து உள்ளது என்றவர்,
மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கொண்டு வந்து உள்ளோம் என்றும் எதிர்க்கட்சிகளின் சதியால் அது நிறைவேற்றப்படவில்லை. நமது குடிமக்களை கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளை பெண்களின் தலைமையில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் வீழ்த்தியதில் இருந்து, அமைச்சரவை என அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிகாரம் அடைய மோடி வழிவகுத்து என்றார்.
அடுத்த 10 ஆண்டுகளில் திருப்பூரின் வளர்ச்சி நான்கு மடங்கு வளர (எப்.டி.ஏ) போடப்பட்டு உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருப்பூர் பெருமளவில் பயன்பெறும் எனவும் தெரிவித்தார்.
ரயில்வேவிற்காக 7611 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 77 அம்ரீத் பாரத் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. 4,000 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் வீடு திட்டத்தில் 5.75 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. நிதி ஒதுக்கியும் அதை பெற்றுத் தர திமுக அரசு முன்வரவில்லை.
கோவையில் மூன்று ஆண்டுகளில் விமான நிலையம் மேம்படுத்தப்படும். தூத்துக்குடி, திருச்சி உள்பட பல இடங்களில் மேம்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்த 1000 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்க்கட்சிகள் மோடி தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யவில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தேசிய கட்சியாக இல்லாமல், பிராந்திய கட்சியாக மாறி உள்ளது.
கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மின்சார துறையில் ஹார்ட்ஸ்க் காணாமல் போகிறது. த.வெ.க யாரையோ காப்பாற்ற நினைக்கிறதோ ? என சந்தேகமாக உள்ளது.
தற்போது தான் த.வெ.க ஆட்சிக்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். அதற்காக திறமையற்ற நிர்வாகம், ஆட்சியில் நடக்கும் அவலங்கள் குறித்து வேடிக்கைபார்க்க முடியாது. கருத்துகள் கூறப்படும். ஆக்க பூர்வமான எதிர்கட்சியாக தமிழக பா.ஜ.க செயல்படும்.
பா.ஜ.க சித்தாந்தம் சார்ந்த கட்சி, தனிநபர் அல்லது குடும்பம் சார்ந்த கட்சி அல்ல. 2016ஆம் ஆண்டு கூட்டணி இல்லாமல் கோவை தெற்கு தொகுதியில் 23 சதவீத வாக்குகள் பெற்று உள்ளோம். 27 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு உள்ளோம். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் தமிழக பா.ஜ.க வுடன் உள்ளனர். எங்களுக்கு எந்த கிளைகளும் இல்லை.
வெளியே சென்றவர்கள் மோடிக்காக திரும்பி வருவார்கள். பா.ஜ.க முக்கிய முடிவுகள் எடுக்க கமிட்டி உள்ளது, எனவே தனிநபர்கள் செல்வது கட்சியை பாதிக்காது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக நலனை காக்க தமிழக பா.ஜ.க துணை நிற்கும்.
நீட் முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணை நடக்கிறது என்றார்.

0 கருத்துகள்: