கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை வழக்கு : கைதிகள் ஆஜர்படுத்துவதில் தாமதம் - விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு !!!
63 பேரின் சாட்சியப் பதிவுகள் நிறைவு: கருமத்தம்பட்டி டி.எஸ்.பி பாரியிடம் மீண்டும் சாட்சியம் !!!
கோவையை அடுத்த சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கோவை, சூலூர் பகுதியில் கடந்த மே மாதம் 10 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாகக் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் சிறுமியின் தந்தை உட்பட இதுவரை 63 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும், வழக்கை விசாரித்த அதிகாரியான கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) பாரி ஏற்கனவே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து உள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மத்தியச் சிறையிலுள்ள கார்த்திக் மற்றும் திருச்சி சிறையிலுள்ள மோகன் ஆகிய இருவரையும் பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதில் போதிய கால தாமதம் ஏற்பட்டது.
அன்றைய தினம் அரசுத் தரப்பு சாட்சியான டி.எஸ்.பி பாரி மீண்டும் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

0 கருத்துகள்: