கோவை தி.மு.க-வில் மெகா வெடி... 'கட்சி இல்லை இது கார்ப்பரேட் கம்பெனி': செந்தில் பாலாஜி மீது பகீர் குற்றச்சாட்டை சுமத்தி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு அதிரடி ராஜினாமா !!!
செம்மொழி பூங்காவில் பிரம்மாண்ட ஊழல் என அடுத்த குண்டை தூக்கி வீசிய கவுன்சிலர்; இன்னும் ஒரு வாரத்தில் பல விக்கெட்டுகள் விழும் என மிரட்டல் அறிவிப்பு!தி.மு.க வில் ஜனநாயகம் மற்றும் உழைப்பிற்க்கு அங்கீகாரம் இல்லை என்றும் பார்டி பண்டால் பொதுமக்கள் மட்டுமல்ல தி.மு.க தொண்டரும் பாதிக்கட்டு உள்ளதாகவும் அதே போல் தி.மு.க வின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் செயல்படுகள் கட்சியை ஒரு கம்பெனியை போல் நடத்துவதாக குற்றம்சாட்டி கோவை மாநகராட்சியின் 22 தி.மு.க கவுன்சிலர் கோவை பாபு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.
அதேபோல் கோவையில் கட்டப்பட்டு உள்ள செம்மொழி பூங்காவில் முறைகேடு நடந்து உள்ளதாகவும் குற்றசாட்டு இது குறித்து முழுமையான விசாரணை தமிழக அரசுநடத்தப்பட வேண்டும் என கோரிக்கை
இன்னும் ஒரு வாரத்தில் பல கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க வின் நிர்வாகிகள் பலர் விலக இருப்பதாகவும் கோவை பாபு அறிவிப்பு.

0 கருத்துகள்: