வியாழன், 2 ஜூலை, 2026

50 ஆண்டு காலக் கனவு நனவானது: இதுவரை பேருந்தே கண்டிராத ஊக்கப்பட்டி மலைக் கிராமத்திற்குள் நுழைந்தது அரசுப் பேருந்து!

SHARE

 50 ஆண்டு காலக் கனவு நனவானது: இதுவரை பேருந்தே கண்டிராத ஊக்கப்பட்டி மலைக் கிராமத்திற்குள் நுழைந்தது அரசுப் பேருந்து !!!

​ த.வெ.க அரசின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் பெரும் மகிழ்ச்சி!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே இதுவரை பேருந்தே கண்டிராத ஊக்கப்பட்டி மலை கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் தொடங்கி வைத்தார் 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோலம் பாளையம் ஊராட்சியில் உள்ள ஊக்கப்பட்டி என்ற மலை கிராமம் உள்ளது 

இந்த மலை கிராமத்துக்கு 50 ஆண்டு காலமாகியும் இதுவரை பேருந்து சேவை என்பது இல்லை இங்கு வாழும் மலை கிராமவாசிகள் தங்களது அன்றாட தேவைகளுக்கு பொருட்கள் வாங்கவும் மற்றும் வேலை வாய்ப்புக்காகவும் அங்குள்ள குழந்தைகள் கல்வி பயிலவும் நடந்து வந்து தோலாம் பாளையம், ஊக்கையனூர் வரை வந்து தான் பேருந்தில் ஏறி பயணிக்க வேண்டும் 

அது குறித்து பலமுறை ஆட்சியாளர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசிடம் மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் 

அந்த கோரிக்கையை ஏற்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஊக்கப்பட்டி மலை கிராமத்துக்கு இன்று முதல் அரசு பேருந்து சேவை வழங்கப்பட்டு உள்ளது 

நீலாம்பதி முதல் ஊக்கப்பட்டி வரை மேட்டுப்பாளையம் முதல் தோலம்பாளையம் செல்லும் 4B அரசு பேருந்து சேவையை ஊக்கையம்பட்டி வரை நீட்டிப்பு செய்து பேருந்து வசதி வழங்கப்பட்டு உள்ளது 

இந்த பேருந்து காலை எட்டு 45 மணிக்கு மாலை 5:45 மணிக்கு என இரண்டு முறை இந்த கிராமத்துக்கு பேருந்து சென்று வரும் வகையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது 

இன்று தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவையை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் என். சுனில் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார் 

இதுவரை பேருந்தை கண்டிராத கிராம மக்கள் புதிய பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்ததால் அரசுக்கு நன்றி தெரிவித்து பேருந்தை உற்சாகத்துடன் வரவேற்றனர்

மேலும் முதல் நாள் பயணத்தில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் பொதுமக்களுடன் பயணம் செய்து மக்களை உற்சாக படுத்தினார் இந்த நிகழ்வில் கோவை அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் செல்வகுமார் மேட்டுப்பாளையம் மேலாளர் பாஸ்கர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளும் 

த.வெ.க மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட த.வெ.க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: