"அக்கா என்பவளும் ஓர் அன்னைதான்... நெகிழ வைத்த அரசு பள்ளி மாணவியின் அன்பு..."
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அக்கா–தம்பி இருவரும் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட மறுத்த தனது தம்பியை, தாயின் பாசத்துடன் அருகில் அமர வைத்து அக்கா அன்பாக உணவு ஊட்டிவிடும் காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
இந்த உணர்வுபூர்வமான தருணத்தை யாரோ ஒருவர் செல்போனில் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
தாயின் அன்பையும் அரவணைப்பையும் நினைவூட்டும் அந்த சிறுமியின் செயல், "அக்கா என்பவளும் ஓர் அன்னைதான்" என்ற சொல்லுக்கு உயிரூட்டுவதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 கருத்துகள்: