பூனைக்குட்டி’யுடன் பைக் ரைடு ; கோவையில் பூனையைத் தோளில் சுமந்து டூ-வீலரில் மாஸாகச் சென்ற நபர்: வெள்ளலூர் - போத்தனூர் சாலையில் கியூட் வீடியோ வைரல் !!!
பூனையின் ‘ஹெல்மெட் இல்லாத’ சொகுசுப் பயணம் – நெட்டிசன்களைக் கவர்ந்த செல்லப்பிராணி பாசம் !!!
கோவை, வெள்ளலூரில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில், தனது செல்லப் பூனையைத் தோளில் அமர வைத்துக் கொண்டு நபர் ஒருவர் எவ்வித பயமுமின்றி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ‘கியூட்’ வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது.
பொதுவாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், அவற்றைப் பிரத்யேகக் கூண்டுகளில் அடைத்தோ அல்லது காரிலோ தான் அழைத்துச் செல்வார்கள். டூ-வீலர்களில் அழைத்துச் சென்றால் அவை பயந்து ஓடி விடக் கூடும் என்பதால் பலரும் அதைத் தவிர்ப்பார்கள்.
ஆனால், கோவையில் சற்று வித்தியாசமாக வெள்ளலூர் - போத்தனூர் பிரதான சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், தனது வளர்ப்புப் பூனையைத் தோளில் சொகுசாக அமர வைத்தபடி வண்டியை ஓட்டிச் சென்று உள்ளார்.
வழக்கமாகச் சிறு சத்தம் கேட்டாலே மிரண்டோடும் பூனைகள், இதற்கு நேர்மாறாக அந்தப் பூனை, எஜமானரின் தோளைத் தனது கால்களால் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு, சாலையில் செல்லும் மற்ற வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி எவ்வித பயமும் இன்றி செம ‘கெத்தாக’ப் பயணித்தது.
சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்த ‘கேட் ரைடு’!
அந்த வழியாகச் சென்ற மற்றொரு வாகன ஓட்டி, இந்த வினோத மற்றும் ரசிக்கும் படியான காட்சியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.
இந்த வீடியோ தற்போது கோவையின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் செம வைரலாகி வருகிறது.

0 கருத்துகள்: