புதன், 1 ஜூலை, 2026

மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ” ; ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்களை கயிறு மூலம் மீட்பு - கொட்டும் கனமழையால் சுற்றுலா பயணிகளுக்கு தடை !!!

SHARE

 மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ” ; ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்களை கயிறு மூலம் மீட்பு - கொட்டும் கனமழையால் சுற்றுலா பயணிகளுக்கு தடை !!!

​“அதிரப் பள்ளி கூடபுல பகுதியில் வெள்ளப்பெருக்கு”: சோலையார், நீரார் அணைகளை 24 மணி நேரமும் கூர்மையாகக் கண்காணிக்கும் பொதுப் பணித் துறையினர் !

கோவை மாவட்டம், வால்பாறை அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் வால்பாறை- ஜூலை-01 கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் அப்பகுதியில் உள்ள பிர்லா அருவி சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி கூழாங்கல் ஆறு பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டு உள்ளது வருவாய்த் துறையினர் காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றுக்கு செல்ல தடை விதித்து உள்ளனர். மேலும் சோலையார் அணை காடம்பாறை அணை நீரார் அணை நீர்மட்டத்தை பொதுப்பணி துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சாலக்குடி அதிரப்பள்ளி கூட புல பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது கோவில் பூசாரி தகவல் தீயணைப்புத் துறையினருக்கு அளித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் சிக்கி அவர்களை பத்திரமாக கயிறு மூலம் மீட்டனர் மேலும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு வருவாய்த் துறையினர் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: