வழக்குகள் கழுத்தை நெறிப்பதால் கட்சி மாறுகிறார்கள்” ; த.வெ.க-வில் இணையும் அ.தி.மு.க வினர் மீது பொள்ளாச்சி ஜெயராமன் ‘பகீர்’ குற்றச்சாட்டு - வீடியோ வெளியீடு !!!
“அ.தி.மு.க வை விட்டு வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்களின் சுயநலத்திற்காகவே கட்சி மாறுகிறார்கள்” என்று அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார்.
சமீபகாலமாக அ.தி.மு.க வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது குறித்துக் கோவையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுப் பேசி உள்ள பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி மாறுபவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பாய்ந்து உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள வீடியோ பேச்சில் கூறும்போது :
“அ.தி.மு.க வை விட்டுச் செல்பவர்கள் அனைவரும் தங்களது சுயநலத்திற்காக மட்டுமே மாறுகிறார்கள். அவர்கள் மீதுள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு (சொத்துக் குவிப்பு வழக்கு), ஊழல் வழக்கு மற்றும் நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு சட்ட ரீதியான வழக்குகள் அவர்களின் கழுத்தை நெறிக்கின்றன. இந்த வழக்குகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தப்பித்துக் கொள்ளவுமே அவர்கள் தற்பொழுது கட்சி மாறிப் புகலிடம் தேடுகிறார்கள். ”
அ.தி.மு.க வில் இருந்து த.வெ.க-விற்கு நிர்வாகிகள் மைகிரேஷன் (Migration) ஆகி வரும் சூழலில், “அ.தி.மு.க விற்குத் துரோகம் இழைத்து விட்டுச் செல்பவர்களின் பின்னணியில் வழக்கு பயம் மட்டுமே உள்ளது” எனப் பொள்ளாச்சி ஜெயராமன் ஓப்பனாகப் பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில், குறிப்பாகக் கொங்கு மண்டல அ.தி.மு.க மற்றும் த.வெ.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பி உள்ளது.

0 கருத்துகள்: