கஞ்சா கும்பலைக் காட்டிக் கொடுத்த சட்டக் கல்லூரி மாணவன் மீது தாக்குதல் ; போலீஸ் அலட்சியம்? - பகீர் கிளப்பும் வீடியோ !!!
“உதவி செஞ்ச எனக்கு இதான் பரிசா ?” - குற்றவாளிகளைக் தப்பவைக்கப் பார்க்கிறாங்க என பாதிக்கப்பட்ட நபர் கதறல் - ஒருவர் மட்டும் கைது !!!
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் கஞ்சா விற்பனை செய்தவர்கள் தன்னை தாக்கியதாக காயப்படுத்தியதாகவும், இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய முறையில் விசாரிக்கவில்லை என்று சட்டப்படிப்பு படித்து வரும் பாலாஜி என்ற மாணவர் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ்காலனி பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான பாலாஜி, இவர் திருப்பூரில் உள்ள சட்டக் கல்லூரியில் எல் எல் பி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க கஞ்சா பயன்படுத்துபவர்களின் விபரங்களை காவல்துறையினருக்கு ரகசிய தகவல்காள தெரிவித்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் இவரை கஞ்சா பயன்படுத்துவோர் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து உள்ளார். இது தொடர்பாக இவரை தாக்கிய சல்மான்கான், அவரது அம்மா, இனையதுல்லா, நிஷா, அயூப், சாகிர் உள்ளிட்ட 6 பேர் தன்னை செறுப்பு மற்றும் கட்டையால் தாக்கியதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் முறையாக வழக்கு பதிவு செய்யாமல் குற்றவாளிகளை தப்ப வைக்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்து உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
ஏற்கனவே ஒரு வருடம் முன்பு ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டபோதும் வழக்கு பதியவில்லை எனவும் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் தான் காவல்துறையினருக்கு உதவி செய்யப் போய் தன்னை தாக்கியதாகவும், இது தொடர்பான புகாரில் ஒன்னும் பெரியதாக காயம் இல்லை, ஒன்னும் ஆகவில்லை என கூறி ஒரு தலை பட்சமாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் நடந்து கொண்டதாகவும், இது தொடர்பாக காவல் காண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ வெளியான நிலையில் பாலாஜியின் புகாரின் அடிப்படையில் அவரைத் தாக்கியதாக இணையதுல்லா என்பவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

0 கருத்துகள்: