நள்ளிரவில் நைஸாக காம்பவுண்ட் சுவர் குதிக்கும் மர்ம நபர்... வீடுகளுக்குள் எட்டிப்பார்த்து அராஜகம் செய்யும் வடமாநில வாலிபர் : கோவையில் மக்கள் பீதி - சி.சி.டி.வி வீடியோ வைரல் !!!
மாடிக்குச் சென்று விபரீத சேட்டை; அச்சத்தில் தூக்கத்தை தொலைத்த குடியிருப்புவாசிகள்; அசம்பாவிதம் நடக்கும் முன் ஆக்ஷன் எடுக்க போலீசுக்கு கோரிக்கை !!!
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே சூர்யா நகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் நைஸாக வீடுகளுக்குள் புகுந்து எட்டிப் பார்ப்பதும், கேட் ஏறி குதித்து மாடிகளுக்குச் சென்று அராஜகத்தில் ஈடுபடுவதுமான சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபரீத நடமாட்டத்தால் பெரியநாயக்கன்பாளையம் பகுதி மக்கள் தூக்கத்தைத் தொலைத்து தவித்து வருகின்றனர்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியான சூர்யா நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், யாருக்கும் தெரியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் ரகசியமாக உலா வந்து உள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தைப் பயன்படுத்தி, வீடுகளின் காம்பவுண்ட் சுவர்கள் மற்றும் கேட்களை மிகச் சுலபமாக ஏறி குதித்து உள்ளே நுழையும் அந்த நபர், ஜன்னல் வழியாக வீடுகளுக்குள் என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்த்து அநாகரிகமாக நடந்து கொண்டு உள்ளார்.
அதுமட்டுமன்றி, அந்த மர்ம நபர் வீடுகளின் மாடிப் படிகள் வழியே ஏறிச் சென்று, மேல் தளங்களில் சோதனை செய்வதும், அங்கே துணிமணிகள் அல்லது பொருட்கள் ஏதேனும் கிடைக்கிறதா ? எனத் தேடுவதுமாக இருந்து உள்ளார். இந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த நபர் சுவரேறி குதித்து மாடிக்குச் செல்லும் காட்சிகள் அங்கு உள்ள ஒரு வீட்டின் சி.சி.டி.வி கேமராவில் துல்லியமாகப் பதிவாகி உள்ளது.
அந்தச் சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
தற்பொழுது அந்த சி.சி.டி.வி வீடியோ ஆதாரங்களை மக்கள் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட, அது நெட்டிசன்கள் மத்தியில் தீயாய் பரவி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்பின் தெரியாத வடமாநில நபர் ஒருவர் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து எட்டிப் பார்ப்பதும், மாடிகளுக்குச் செல்வதுமாக இருப்பது அப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இடையே கடுமையான பீதியை உருவாக்கி உள்ளது.
திருட்டு சம்பவங்களோ அல்லது பெண் பாதுகாப்பு சார்ந்த ஏதேனும் அசம்பாவித விபரீதங்கள் ?நடப்பதற்கு முன்பாக, காவல் துறையினர் உடனடியாகக் அந்த நபரை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: