புதன், 8 ஜூலை, 2026

கோவையில் தென்னிந்திய அளவிலான கார் ரேஸ்: சர்வதேச தரத்தில் உள்நாட்டிலேயே தயாரான ரேஸ் கார்கள் !!!

SHARE

 கோவையில் தென்னிந்திய அளவிலான கார் ரேஸ்: சர்வதேச தரத்தில் உள்நாட்டிலேயே தயாரான ரேஸ் கார்கள் !!!

சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் இந்திய இளைஞர்கள் பங்கேற்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் தென்னிந்திய அளவிலான சியால் கார் பந்தயத் தொடரின் இரண்டாவது சீசன் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் போட்டித் தொடரில் முதன்முறையாக 'கிராஸ் கார்ட்'என்ற புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த பிரிவு, சர்வதேச தரத்தில் ஆஃப்-ரோடு கார் பந்தயங்களில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களை உருவாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

கிராஸ் கார்ட் வாகனங்கள் இலகுரக வடிவமைப்பு, ரியர்-வீல் டிரைவ் தொழில்நுட்பம் மற்றும் மண், கற்கள், மணல் உள்ளிட்ட சமமற்ற சாலைகளில் அதிவேகமாக இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில், இவ்வாகனங்களை கரி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்து உள்ளது.

இதன் மூலம் இந்திய ஓட்டுநர்களுக்கு உலகத் தரத்திலான ஆஃப்-ரோடு ரேசிங் அனுபவம் கிடைப்பதுடன், சர்வதேச போட்டிகளுக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், புதிய கிராஸ் கார்ட் பிரிவில் பங்கேற்க விரும்பும் ஓட்டுநர்களுக்கான தகுதித் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சியால் தொடரின் செயல் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: