இசை உலகை உலுக்கிய மாபெரும் சோகம்: கானக்குயில் எஸ்.ஜானகி காலமானார்; மைசூரில் இன்று இறுதிச் சடங்கு !!!
தீவிர சிகிச்சைப் பிரிவில் நேர்ந்த திடீர் மாரடைப்பு; லட்சக்கணக்கான ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் விடை பெற்றார்!!!
பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ்.ஜானகி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், ஜானகியின் இறுதி சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது குறித்து குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "ஜானகி மறைந்த நேரத்தில் அவருடன் மருமகள் உமா முரளி, பேத்தி அப்சரா வைத்யுலா, பேத்தியின் கணவர் கணேஷ் சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர்.
ஜானகியின் இறுதி சடங்கு, இன்று மைசூரில் நடைபெறும். இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் திரை துறையினர் அஞ்சலி செலுத்தவதற்காக வைக்கப்படும். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு, மாலை 5 மணி அளவில் மைசூரில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் குடும்ப முறைப்படி இறுதி சடங்கு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ஜானகியின் உடல்நிலை குறித்தும் அவரது மறைவு குறித்தும் மைசூர் அப்பல்லோ பி.ஜி.எஸ் மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில்,
"ஜானகி நேற்று மதியம் 12.49 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியு-க்கு மாற்றப்பட்டார்.
பல்துறை மருத்துவர்களின் தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டு இருந்த போதும்.. சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ நெறிமுறைகளின்படி உடனடியாக அவருக்கு சி.பி.ஆர் போன்ற அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் உயிர் காப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது.
மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், தொடர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. இதனால் அவர் இரவு 7.30 மணிக்கு உயிரிழந்தார்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பாடகி சுஜாதா அளித்த பேட்டியில்,
"அன்று ஜானகி அம்மா போட்ட பாதையில் தான் நாங்கள் எல்லாரும் இன்று போய்க் கொண்டு இருக்கிறோம்; எங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தவரே அவர் தான்" நெகிழ்ந்து கூறி இருக்கிறார்..
அதே போல டைரக்டர் டி.ராஜேந்தர் வெளியிட்டு உள்ள இரங்கலில், "பாட்டு படித்தாயே... முத்திரை பதித்தாயே... இன்று நீங்காத நித்திரைக்கு சென்று விட்டாயே... என்று என் நெஞ்சம் நீங்காத சோகத்தை கொண்டு விட்டது" என்று உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
பின்னணி பாடகி எஸ்.ஜானகி அம்மாவின் தனித்துவமான குரல் வளம், துல்லியமான மொழி உச்சரிப்பு, நளினமான உணர்வுகளை தனது குரலிலேயே கடத்தும் வித்தையில் அனைத்தும் நிகர் அவரே தான்.
சோகம், மகிழ்ச்சி, கிராமியம், துள்ளல் இசை என அனைத்து பாணிகளிலும் தனித்து நின்று முத்திரை பதித்த இவர், எஸ்.விஸ்வநாதன் முதல் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார்.
திரையுலகில் பெரும் செலிபிரிட்டியாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் எளிய குணத்தோடும், புதிய திறமைகளை ஊக்குவிக்கும் பண்போடும் வாழ்ந்து மறைந்து உள்ளார் இந்த இசைக்குயில்..
அதனால் தான் தங்களின் சொந்தக் குடும்ப உறுப்பினர் என்றே ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களாலும் கண்ணீருடன் நினைவுகூரப்படுகிறார்.
ஜானகியின் மறைவுக்கு பல்வேறு கலைஞர்கள் ஆழ்ந்த இரங்கலையும், கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்து வருகிறார்கள்.. அந்த வகையில், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி 4 முறை தேசிய விருதுகளையும் எண்ணற்ற மாநில அரசின் விருதுகளையும் வாங்கி குவித்த தென்றல் இசை பாடகி, தேன் குரல் தேவதை எஸ்.ஜானகி மறைந்து விட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகிறது.
நெஞ்சம் பாடும் புதிய ராகம், தாளம் உன்னை தேடுதே என்று நினைவில் நின்ற நெஞ்சில் ஒரு ராகம் தந்து விட்டாரே.. நீங்காத சோகம்... வசந்தம் பாடி வர.. வைகை ஓடி வர... இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா என்று என் மெட்டுக்கு மெருகேற்றியவர் பாட்டுக்கு அமுதூட்டியவர்.
சம்சார சங்கீதம் படத்தில் என் மகன் சிலம்பரனுக்காக 'ஐ அம் எ லிட்டில் ஸ்டார்... ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்...' என்று பாட்டு படித்தாயே... முத்திரை பதித்தாயே... இன்று நீங்காத நித்திரைக்கு சென்று விட்டாயே... என்று என் நெஞ்சம் நீங்காத சோகத்தை கொண்டு விட்டது..
அம்மையாரை இழந்து வாடும் அவரது இல்லத்தினருக்கும். இந்திய கலை உலகத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதலையும் இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன். அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்" என்று தெரிவித்து உள்ளார்.
அதேபோல பாடகி சுஜாதா அளித்த பேட்டியில்,
"அன்று ஜானகி அம்மா போட்ட பாதையில் தான் நாங்கள் எல்லாரும் இன்று போய்க் கொண்டு இருக்கிறோம்; எங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தவரே அவர் தான்.
நாங்கள் மைசூருவிற்கும், ஹைதராபாத்திற்கும் நேரில் போய் ஜானகி அம்மாவை பார்த்தோம். 2 மாதங்களுக்கு முன்னாடி தான் ஜானகி அம்மாவைப் பார்த்தேன்.. அப்போ நல்ல ஆரோக்கியமாக இருந்தார்.. நாம் அங்கே போனால் நம்மைச் சாப்பிட வைக்காமல் விடவே மாட்டார். தன் கையாலேயே சாதத்தை உருண்டை உருண்டையாகப் பிடித்து நமக்கு ஊட்டி விடுவார். அவ்வளவு பாசம், அவ்வளவு சிநேகம் அவரிடம் இருந்தது.. அதுதான் ஜானகி அம்மா.
அவர்களுடைய பாட்டு நமக்குத் தெரியும், அது வேறு லெவல், அவர்கள் ஒரு நடமாடும் சரஸ்வதி. ஆனால், ஒரு சிறந்த மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து இருக்கிறார்.. ஒரு உண்மையான கலைஞர் இப்படித் தான் இருக்க வேண்டும்" என்று விக்கி விக்கி அழுதவாறே கூறினார்.


0 கருத்துகள்: