1001 பொட்டு தாலி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பெரிய மாரியம்மன் ; கோவையில் ஆடி வெள்ளி கோலாகலம் !!!
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் : 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கல் !!!
பூமாதேவியும் பார்வதி தேவியும் அருள்புரியும் ஆடி மாதத்தில், அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இம்மாதத்தில் அம்மனை மனதார வேண்டி வழிபாடு செய்தால், வாழ்வில் உள்ள சகல தடைகளும் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.
இதன் ஒரு பகுதியாக, தெலுங்குபாளையத்தில் அமைந்து உள்ள பெரிய மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் பிளாக் மாரியம்மனுக்கு ஆடி 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டுச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, அம்மனுக்கு "1001 பொட்டு தாலி" கொண்டு பிரம்மாண்டமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனைத் தரிசித்து வழிப்பட்டனர்.
விழாவை முன்னிட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான அடுத்த வாரம், அம்மனுக்குச் சிறப்பு "மஞ்சள் தூள் அலங்காரம்" மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளதாகக் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, பக்தர்கள் அனைவரும் இதில் திரளாகக் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 கருத்துகள்: