கோவையில் டயர் வெடித்துக் கவிழ்ந்த லாரி" ; அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபிய ஓட்டுனர் - சாலையில் நடுரோட்டில் கொட்டிய தேங்காய்கள்!
கோவை, உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கிச் சென்ற தேங்காய் லோடு ஏற்றி வந்த ஈச்சர் லாரி, திடீரென டயர் வெடித்துச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
லாரியில் இருந்த தேங்காய்கள் சாலை முழுவதும் கொட்டிக் கிடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோவை, உக்கடம் பகுதியில் இருந்து கரும்புக்கடை செல்லும் பிரதான சாலையில், நேற்று இரவு பாரம் ஏற்றிய ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரியில் முழுவதும் தேங்காய்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.
கரும்புக்கடை அருகே லாரி வந்த போது, எதிர்பாராத விதமாக லாரியின் டயர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் நிலைகுலைந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
லாரி கவிழ்ந்து அதில் ஏற்றி வரப்பட்ட தேங்காய்கள் சிதறிச் சாலை முழுவதும் கொட்டிக் கிடந்தன. நல்லவேளையாக, லாரி கவிழ்ந்த நேரத்தில் அருகில் பிற வாகனங்கள் எதுவும் நெருக்கமாக வராததால் மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உடனடியாக அங்கு இருந்தவர்கள் சாலையில் சிதறிக் கிடந்த தேங்காய்களை அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு சாலையை சரி செய்தனர்.

0 கருத்துகள்: