திங்கள், 3 ஆகஸ்ட், 2026

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் - கோவையில் போக்சோ சட்டத்தில் பள்ளிக் கூட மாணவர் மீது வழக்கு !!!

SHARE

 கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் - கோவையில் போக்சோ சட்டத்தில் பள்ளிக் கூட மாணவர் மீது வழக்கு !!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய பள்ளிக்கூட மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினர் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிங்கப்பெண்கள் அதிரடிப்படையிடம் புகார் தெரிவிக்க 1091 என்ற எண்ணம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவி ஒருவர், சிங்கப்பெண்கள் அதிரடிப்படை உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்பொழுது அவர் தான் 16 வயதாக இருக்கும் போது பள்ளிக் கூடத்தில் படித்து வந்ததாகவும், அப்பொழுது அவரை விட இரண்டு வயது குறைவான 14 வயது மாணவர் காதலிப்பதாக கூறியதாகவும், இதனால் அவர் மாணவரிடம் பேசி வந்து உள்ளதாகவும், ஒரு நாள் அந்த மாணவர் அவரை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.

அதை செல்போனில் வீடியோ எடுத்து தற்பொழுது, அந்த மாணவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை காண்பித்து மிரட்டி வருவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இது பற்றி சிங்கப்பெண் அதிரடிப் படையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் காவல் துறையினர் அந்த மாணவி புகார் அளித்த தற்பொழுது பிளஸ் டூ படித்து வரும் மாணவரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த மாணவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து தற்போது மிரட்டி வருவதும் உறுதியானது.

உடனே கோவை மாநகரப் பகுதியைச் சேர்ந்த மகளிர் காவல் துறையினர் அந்தப் பள்ளிக் கூட மாணவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது;

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்பொழுது 19 வயது ஆகிறது. ஆனால் அவர் பாதிக்கப்பட்ட போது 16 வயது எனவே அந்த மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடப்பட்டு உள்ளது என்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: