"சின்னஞ்சிறு வியாபாரிகள்" ; கோவை வடவள்ளிப் பள்ளியில் குழந்தைகள் நடத்திய கலக்கல் காய்கறி சந்தை !!!
காய்கறி விற்பனை மற்றும் வாங்கும் பயிற்சி: மழலையர் பள்ளி நிர்வாகத்தின் அசத்தல் விழிப்புணர்வு முயற்சி !!!
கோவை, வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல எல்லோ ஸ்டார் (yellow Star) என்ற குழந்தைகள் பள்ளியில், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைச் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் 'காய்கறி சந்தை' (Vegetable Market) விழிப்புணர்வு நிகழ்ச்சி மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியின் நோக்கம்:
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் காய்கறிகளை உண்ணத் தயங்கும் நிலையில், காய்கறிகளின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதில் குழந்தைகளுக்கு விற்பனை முறை பயிற்சி:
காய்கறிகளை எவ்வாறு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்து வியாபாரம் செய்வது,
தரம் அறிதல்:
சந்தையில் புதிய மற்றும் தரமான காய்கறிகளை எவ்வாறு பார்த்துத் தேர்ந்தெடுத்து வாங்குவது,
சத்துக்கள் விழிப்புணர்வு:
ஒவ்வொரு காய்கறியை உண்பதாலும் உடலுக்குக் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் மற்றும் சத்துக்கள்,
கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்துச் ஆசிரியர்கள் நேரில் செய்து காண்பித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.
ஆர்வத்துடன் பங்கேற்ற மழலைகள்:
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த காய்கறி கடைகளில், பள்ளி மழலைகள் தாங்களே வியாபாரிகளாகவும், வாடிக்கையாளர்களாகவும் மாறி ஆர்வத்துடன் காய்கறிகளை விற்பனை செய்தும், கூச்சமின்றி வாங்கி மகிழ்ந்தனர்.
சிறு வயதிலேயே காய்கறிகளைப் பற்றிய புரிதலையும், நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச் சந்தை அறிவையும் அளிக்கும் வகையில் அமைந்த இந்த விசேஷ நிகழ்வு, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று உள்ளது.

0 கருத்துகள்: