கலைஞர் குறித்து அமைச்சர் கூறிய வார்த்தை; மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய் !!!
அமைச்சர் ரஞ்சித் குமார் பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டதற்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் சார்பில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்.
நான்கு நாள் விடுமுறைக்கு பின் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடிய நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் காரசாரமாக நடந்து வருகிறது.
இதற்கு இடையே, மானிய கோரிக்கை விவாதத்தில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் உரையாற்றும் பொழுது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை 'கருணாநிதி' என குறிப்பிட்டார்.
அதாவது, "நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அடுக்கு மொழியில் சொல்லிட்டே இருந்தாங்க" என்றார். இதற்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை "கருணாநிதி" என்று கூறுவது சரியல்ல’ அதை திரும்பிப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்திலேயே கலைஞரை யாரும் கருணாநிதி என்று குறிப்பிடக் கூடாது என்றும், அவ்வாறு குறிப்பிட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் கருணாநிதியும் என்று அவரை அழைக்கக் கூடாது என அவர் கூறி இருந்தார். ஆகவே, அதனை நினைவு கூர்ந்து அவையில் அனைவரும் அவை மரபை கடைபிடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இந்த சூழலில், பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் உரையாற்றும் போது, முன்னதாக அமைச்சர் உங்கள் தலைவர் பெயரை (கருணாநிதி) கூறியது தவறுதான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

0 கருத்துகள்: