உலக நண்பர்கள் தினம்: முதுமலையின் 'பாமா - காமாட்சி' 55 ஆண்டு கால அபூர்வ நட்பு ; சுப்ரியா சாஹு IAS நெகிழ்ச்சி பதிவு வைரல் !!!
உணவு உண்பது முதல் மேய்வது வரை பிரியாத பிணைப்பு : தெப்பக்காடு யானைகளின் நெகிழ்வூட்டும் நட்பு வீடியோ !!!
உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, முதுமலை யானைகள் முகாமில் உள்ள 'பாமா - காமாட்சி' என்ற இரு மூத்த யானைகளின் 55 ஆண்டுகால அபூர்வ நட்பைப் பற்றி தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு IAS பகிர்ந்து உள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் 'பாமா' மற்றும் 'காமாட்சி' ஆகிய இரண்டு அன்பான மூத்த பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரு யானைகளும் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிக்க முடியாத அளவிற்கு மிக நெருங்கிய நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன.
இதுகுறித்துத் தனது தமிழக வளையதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு IAS:
"ஒவ்வொரு நட்பு தினத்திலும் நான் இந்த அன்பான கதைக்குத் திரும்புவது வழக்கம்; இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. பாமா மற்றும் காமாட்சி ஆகிய இரு யானைகளும் 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அசாதாரணமான நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன.
அவை ஒன்றாக மேய்கின்றன, உணவளிக்கும் போது தோளோடு தோள் நிற்கின்றன, ஒன்றுக்கொன்று ஆறுதல் அளிக்கின்றன. இன்றும் கூட, ஒன்று இல்லாமல் மற்றொன்று உணவைப் பெறுவதை அவற்றால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. காலம் அவற்றைச் சுற்றி உள்ள எல்லாவற்றையும் மாற்றி விட்டது, ஆனால் அவர்களின் பிணைப்பை ஒருபோதும் மாற்றவில்லை. நட்புகள் மிகவும் பலவீனமாகி விட்ட இந்தச் சூழலில், பாமா மற்றும் காமாட்சியின் பிணைப்பு என்றென்றும் போற்றப்பட வேண்டிய ஒன்று"
எனக் குறிப்பிட்டு, அந்த யானைகள் ஒன்றாக இருக்கும் ஆவண வீடியோவையும் பகிர்ந்து உள்ளார்.
சுப்ரியா சாஹு IAS பகிர்ந்து உள்ள இந்த வீடியோவும், பாமா - காமாட்சி யானைகளின் பல தசாப்த கால உண்மையான நட்பும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் இதயங்களை வென்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

0 கருத்துகள்: