வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஆடியதால் அதிர்ச்சி – மக்கள் வெளியேற்றம் !!!

SHARE

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஆடியதால் அதிர்ச்சி – மக்கள் வெளியேற்றம் !!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென அசைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு தங்கியிருந்தவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே இரும்புக் கம்பிகள் மூலம் முட்டுக் கொடுக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தங்க நகை தொழிலில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் இந்த கட்டிடத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை கட்டிடத்தில் அசைவு ஏற்பட்டதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து கட்டிடத்தின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், இந்த கட்டிடத்திற்கு அருகிலேயே மற்றொரு அடுக்குமாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள அசைவுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: