வியாழன், 17 செப்டம்பர், 2026

எல் அண்ட் டி பைபாஸில் 'திரில்' சம்பவம்: 407 ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்பு!

SHARE

ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் மாஸ் காட்டிய பாம்பு பிடி வீரர்... பதறியடித்த ஓட்டுநர்!

கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் லாரி இன்ஜினுக்குள் சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சச சாரைப் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் பயணித்துக் கொண்டு இருந்த 407 ஈச்சர் லாரியின் ஓட்டுநர், வாகனத்தின் இன்ஜின் பகுதியில் ஏதோ அசாதாரண நடமாட்டம் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்து உடனடியாக லாரியைச் ஓரங்கட்டிச் பரிசோதித்து உள்ளார். அப்போது இன்ஜினின் குறுகலான பகுதியில் 8 அடி நீளமுள்ள பிரம்மாண்ட சாரைப் பாம்பு சுருண்டு பதுங்கி இருப்பதைப் பார்த்து உறைந்து போன ஓட்டுநர், உடனடியாக பாம்பு பிடி வீரருக்குத் தகவல் தெரிவித்தார்.

​சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர், லாரியின் சூடான இன்ஜின் பகுதிக்குள் சிக்கி இருந்த பாம்பிற்கு எந்தவித காயமும் ஏற்படாதவாறு, பொதுமக்கள் கூடி நின்ற பதற்றமான சூழலிலும் சுமார் ஒரு மணி நேரம் தீவிரமாகப் போராடி அதைச் சாதுரியமாக உயிருடன் மீட்டார்.

 மீட்கப்பட்ட அந்த 8 அடி சாரைப் பாம்பு பின்னர் வனத்துறையினரின் வழிகாட்டுதலின்படி அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

 சாதுரியமாகச் செயல்பட்டு அசம்பாவிதம் ஏதுமின்றி பாம்பை மீட்ட பாம்பு பிடி வீரரின் தீரத்தைப் பாராட்டிச் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: