கோவையில் பள்ளி பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை - உதவியாளர் போக்சோவில் கைது!
கோவை, கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு பேருந்து மூலம் மாணவர்களை அழைத்து வருவது வழக்கம், ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என இரண்டு பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரு பேருந்தில் குறிப்பிட்ட வழிதடத்தில் பணியாற்றும் உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.இது தொடர்பாக சில மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் பேருந்து உதவியாளர் தங்களிடம் பேட் டச் செய்வதாக தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை அரசு அருகே உள்ள ஒரு கிராமத்து பகுதிக்கு வந்த பள்ளி பேருந்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்து நீலாம்பூர் போலீசார் உதவியாளர் சேவியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் பள்ளி சார்பில் யாரும் வராததால், மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது பேருந்து உதவியாளரால் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி பேருந்து உதவியாளர் சேவியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்: