கோவை லாரியின் பின்பக்கம் இருசக்கர வாகனம் மோதி விபத்து - பதபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்...
கோவை எல்.என்.டி பைபாஸ் சாலை சிந்தாமணி புதூர் அருகே லாரியின் பின்பக்கம் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது......
சேலம் பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையான கோவை சிந்தாமணிபுதூர் எல்.என்.டி பைபாஸ் சாலையில் இன்று காலை இருசக்கர வாகனம் ஒன்று லாரியின் பின் பக்கமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அந்த விபத்து தொடர்பான பதபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அதில் அதிவேகமாக வரும் இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருக்கும் லாரியை இடது புறமாக முந்த முற்படும்பொழுது லாரியின் பின்பக்கத்தில் மோதி கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் நடப்பட்டு இருந்த தி.மு.க கொடி கம்பம் மற்றும் நெடுஞ்சாலை கல்லில் மோதி விபத்து ஏற்படுவதும் அந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு வாகனத்தை ஓட்டி செல்லும் நபர் தூக்கி வீசப்பட்டு சாலையிலேயே கிடப்பதுமான காட்சிகள் பதிவாகி உள்ளது. இதன் இடையே இந்த சி.சி.டி.வி காட்சியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.....

0 கருத்துகள்: