புதன், 8 ஏப்ரல், 2026

கோவையில் பரபரப்பு: இருசக்கர வாகனத்தின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு !!!

SHARE

கோவையில் பரபரப்பு: இருசக்கர வாகனத்தின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு !!!

கோவைபுதூர் ரிங் ரோட்டில் பரபரப்பு : பைக்கை மீது ஏறி' படம் எடுத்தாடிய நல்ல பாம்பு - வைரல் வீடியோ !!!

பைக்கை விட்டுவிட்டு ஓடிய வாகன தப்பி ஓடிய ஓட்டி !!!

​கோவை, கோவைபுதூர் ரிங் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டு இருந்த போது, திடீரென சாலை குறுக்கே ஒரு பெரிய நல்ல பாம்பு ஊர்ந்து சென்று உள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி, தனது பைக்கை சாலையோரமாக நிறுத்தி விட்டு, பயத்தில் கீழே இறங்கித் தூரமாக ஓடிவிட்டார்.

​ஆனால், அந்தப் பாம்பு அங்கு இருந்து நகர்ந்து செல்லாமல், நிறுத்தப்பட்டு இருந்த அந்த இருசக்கர வாகனத்தின் மீது மெதுவாக ஏறியது.

 பைக்கின் முன் பகுதிக்குச் சென்ற அந்த நல்ல பாம்பு, அங்கு அமர்ந்தபடி தலையை உயர்த்திப் படம் எடுத்தாடி நீண்ட நேரம் நின்றது.

இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள், ஆச்சரியத்துடனும் பயத்துடனும் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, இந்த அரிய காட்சியைத் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். 

சிறிது நேரம் பைக்கை தனது 'கட்டுப்பாட்டில்' வைத்து இருந்த அந்தப் பாம்பு, பின்னர் தானாகவே இறங்கிப் புதருக்குள் மறைந்தது.

​இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "அந்தப் பாம்பு தனது பயணத்தைத் தொடர லிப்ட் கேட்டு இருக்கும் போல" என இணையவாசிகள் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 அதே சமயம், இதுபோன்ற வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: