டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூபாய் 10 வசூலிப்பது தொடர்கிறது - புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா ?
கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் பத்து கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்கிறது.
இதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா ?என்று மது பிரியர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மதுவை விற்பனை செய்கிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 254 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வந்தன. அதில் நேற்று 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. எனவே தற்பொழுது 280 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இந்நிலையில் சில டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூபாய் 10 வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் காரணமாக ரூபாய் பத்து கூடுதலாக வசதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்தத் திட்டம் அமலில் இல்லாததால், டாஸ்மார்க் கடைகளில் பாட்டில்கள் திரும்பப் பெறப்படுவதும் கிடையாது. ரூபாய் 10 கூடுதலாக வசூலிப்பதால், மது பிரியர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வளம் வருகின்றன. இருந்த போதும் கூடுதலாக ரூபாய் 10 வசூலிப்பது குறையவில்லை, எனவே இதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா ? என்று மது பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு விலை பட்டியலில் உள்ள எம்.ஆர்.பி விலையை விட ரூபாய் பத்து கூடுதலாக வசூலிக்கிறார்கள். குறிப்பாக ஒரு குவாட்டர் ரூபாய் 140 என்றால், ரூபாய் 150 க்கு விற்பனை செய்கிறார்கள். பத்தாயிரம் பாட்டில்களுக்கு ரூபாய் பத்து கூடுதல் வசூல் செய்தால், ரூபாய் ஒரு லட்சம் வரை ஈட்டி விடுகிறார்கள். புதிதாக பொறுப்பேற்று உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூடுவதை வரவேற்கிறோம், அதே நேரத்தில் இது போன்ற கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மது பிரியர்கள் கூறினார்.

0 கருத்துகள்: