வியாழன், 28 மே, 2026

உலக பட்டினி தினம்: கோவை ஆனைக்கட்டியில் 1,500 பேருக்கு பிரியாணி விருந்து கொடுத்த த.வெ.க தொழிலதிபர் !!!

SHARE

 உலக பட்டினி தினம்: கோவை ஆனைக்கட்டியில் 1,500 பேருக்கு பிரியாணி விருந்து கொடுத்த த.வெ.க தொழிலதிபர் !!!

பசி இல்லாத மனித குலத்தை உருவாக்குவதே முதல்வர் விஜய் அண்ணாவின் உன்னத நோக்கம்”: கோவை பழங்குடியின கிராமங்களில் அன்னதான !!!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசஃப் விஜய் ஆணைக்கிணங்க, கோவை ஆனைக்கட்டி மலைப் பகுதியில் வாழும் ஏழை - எளிய பழங்குடியின மக்களுக்கு 1,500-க்கும் மேற்பட்டோருக்குப் பிரம்மாண்ட முறையில் அசைவ விருந்து அன்னதானம் வழங்கிப் பசிப் பிணியைப் போக்கி உள்ளார் த.வெ.க-வைச் சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர் உமா மகேஸ்வரி.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய பகுதிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் வாழும் இடங்களைக் கண்டறிந்து, பொதுமக்களின் பசியைப் போக்கும் வகையில் அன்னதானம் வழங்க வேண்டும் என்று த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்கள் அண்மையில் தொண்டர்களுக்கு ‘ஃபுல் எனர்ஜி’ உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த விஐபி கட்டளையைத் தனது ‘அடிநாதக்’ கொள்கையாக ஏற்றுக் கொண்ட கோவை கஸ்தூரிநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரும், த.வெ.க தீவிரத் தொண்டருமான உமா மகேஸ்வரி, கோவை ஆனைக்கட்டி மலைப் பகுதியில் வாழும் மலைவாழ் பழங்குடி கிராமங்களை இந்த சேவையில் களம் இறங்கினார்.

ஆனைக்கட்டி மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் அப்பகுதி வழியாகச் சென்ற வழிபோக்கர்கள், வாகன ஓட்டிகள் என 1,500-க்கும் மேற்பட்டோருக்குச் சுடச்சுட, சுவையான ‘சிக்கன் பிரியாணி’ அசைவ விருந்தினை உமா மகேஸ்வரி தனது சொந்தச் செலவில் அன்னதானமாக வழங்கி அசத்தினார். மலையக மக்கள் அனைவரும் இந்த அசைவ விருந்தை மிகவும் மகிழ்ச்சியோடு ருசித்துத் தங்களது பசியைத் தீர்த்துக் கொண்டனர்.

இந்த நெகிழ்ச்சியான அன்னதானத் திட்டம் குறித்து த.வெ.க இளம் தொழிலதிபர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"தமிழ்நாட்டின் முதலமைச்சரும், எங்களது த.வெ.க தலைவருமான தளபதி விஜய் அண்ணா உத்தரவின் பேரிலேயே இந்த அசைவ விருந்து அன்னதானச் சேவைக்குச் வழங்கப்பட்டது. ‘பசி’ எனும் கொடிய பிணியை இந்த நாட்டை விட்டே முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற முதல்வர் விஜய் அண்ணாவின் உன்னதமான நோக்கத்திற்கு உறுதுணையாக இருக்கவே இந்தச் சேவையைச் செய்து உள்ளேன்.

மலைவாழ் பழங்குடிகள் வாழும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அங்கு உள்ள முதியவர்கள், பெண்கள், பிஞ்சுச் சிறுவர்கள் எனப் பலருக்கும் அசைவ விருந்து அன்னதானம் வழங்கிய போது எனக்குக் கிடைத்த மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது முதல்வர் விஜய் அண்ணாவின் உன்னத லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறிய முயற்சி தான். இதுபோன்ற மக்கள் நலச் சேவைகளை நான் முன்பிருந்தே தொடர்ந்து செய்து வருகிறேன். இன்றைய தினம் மட்டுமின்றி இனி வரக்கூடிய நாட்களிலும் தொடர்ந்து ஏழை - எளிய மக்களின் பசியைப் போக்க அன்னதானங்கள் வழங்கப்படும். பசி இல்லாத புதிய மனித குலத்தை உருவாக்கத் துடிக்கும் எங்களது தலைவர் தளபதி விஜய் அண்ணாவின் உன்னத நோக்கத்திற்கு என்றும் நான் உறுதுணையாகச் செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.

உலக பட்டினி தினத்தில் பசிப் பிணியைப் போக்க ஆனைக்கட்டி மலைப் பகுதியில் த.வெ.க-வினர் நடத்திய இந்த பிரியாணி வருந்து நெகிழ்ச்சியையும், சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: