வியாழன், 28 மே, 2026

15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த கணவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை !!!

SHARE

 15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த கணவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை !!!

கோவை, ராமநாதபுரம், அம்மன்குளம், எரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (60). இவருக்கு நாகமணி (46) என்ற மனைவி உள்ளார். தர்மராஜிற்கு கடந்த 15 வருடங்களாக மனநலம் சரியில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கடுமையான குடிப்பழக்கமும் இருந்து வந்தது.  

நைலான் கயிற்றில் தற்கொலை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தர்மராஜ், கடந்த 26-ந் தேதி இரவு 10 மணி அளவில் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப் போட்டு தொங்கினார்.

 இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகமணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி ஆம்புலன்ஸை வரவழைத்தார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: