மனைவி பிரிந்து சென்ற துயரம் : வெல்டிங் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை !!!
கேரளா மாநிலம் பாலக்காடு, குலமண்ணம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மகன் வினோத் (35). இவர் கோவை ரத்தினபுரி, சுப்பத்தாள் லே-அவுட்டில் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் வினோத், ஷர்மிளா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வெல்டராக வேலை பார்த்து வந்தார். வினோத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு இடையே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வினோத், கடந்த 6 மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேட்டியால் ஃபேன் கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: