கம்பி எண்ணும் காமுகர்கள் ; தப்ப முயன்ற போது கை, கால் முறிந்த ‘போக்சோ’ கொடூரன் கார்த்தி; மருத்துவமனைக்கே வந்து 15 நாள் ரிமாண்ட் செய்த நீதிபதி !!!
கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில்: மற்றொரு குற்றவாளி மோகன் ஏற்கனவே மத்திய சிறையில் அடைப்பு !!!
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு.
நேற்று மாலை காவல்துறையினரிடமிருந்து தப்ப முயன்ற குற்றவாளி கார்த்தி கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே குதித்த போது வலது கால் மற்றும் வலது கை ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அவன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோவை சூலூர் குற்றவியல் நீதிமன்ற போக்சோ வழக்குகள் நீதிபதி பகவதி அம்மாள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து வழக்கை விசாரித்தார்.
தொடர்ந்து கார்த்தியை வருகிற ஜூன் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.
ஏற்கனவே இன்று காலை இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான மோகன் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான்
தற்போது அதே வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி குணமடையும் வரை காவல்துறை பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பின்னர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: