சனி, 23 மே, 2026

கோவை, சூலூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் சொந்த ஊரான மேட்டூரில் தகனம் !!!

SHARE

கோவை, சூலூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் சொந்த ஊரான மேட்டூரில் தகனம் !!!

மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் தற்பொழுது கோவை மாவட்டத்தில் சூலூர் பகுதியில் வசித்து வந்தார்.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது 10 வயது மகள் திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசி சென்றது தெரிய வந்தது.

 இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் சிறுமியின் சடலம் அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு 

  சொந்த ஊரான மேட்டூர் அருகே கொளத்தூர், உக்கம்பருத்திகாடு கிராமத்தில் அடக்கம் செய்ய எடுத்துவர பட்டு அவரது இல்லத்தின் முன்பு வைக்கப்பட்டது .

  அங்கு சிறுமியின் சடலத்திற்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் சுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திரை. பின்பு அருகில் உள்ள பெரிய கொட்டாய் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சிறுமியின் சடலம் தகனம் செய்யப்பட்டது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: