கோவை ரயில் நிலையம் அருகே ரூபாய் 1 கோடி நகை கொள்ளை முயற்சி வழக்கு ; நெல்லை வாலிபர்கள் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கிய காவல்துறை !!!
கோவை .செல்வபுரம் பகுதியில ஒரு தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. இங்கே முருகேசன் (55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்த கடையில் சென்னையில் இருந்து ஆர்டர் வாங்கி வந்து ஊழியர்கள் தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார்கள்.
இந்த கடையில் செய்யப்படும் தங்க நகைகளை ரயில் மூலம் மீண்டும் சென்னை கொண்டு சென்று அங்கே கடைகளுக்கு கொடுத்து விட்டு பணத்தைப் பெற்று வருவார்கள்.
சம்பவத்தன்று முருகேசன் சென்னை சென்றார். அங்கு உள்ள கடைகளுக்கு ஆர்டர் கொடுத்த நகை கடைகளுக்கு ஆபரணங்களை கொடுத்தார்.
அதன் பிறகு மீதி தங்க நகைகளுடன் நேற்று இரவு சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை புறப்பட்டு வந்தார்.
கோவை ரயில் நிலையம் வந்ததும் நகைகள் அடங்கிய பேக்கை தோளில் அணிந்து கொண்டு ரயில் நிலையம் பின்புறம் பகுதியில் குட் ஷட்ரோட்டில நடந்து சென்றார்
அங்கு அவருக்கு நகைக் கடைக்கு சொந்தமான கார் காத்து இருந்தது. அதில் ஏற முருகேசன் காரை நோக்கி சென்றார். அப்போது கார் அருகே சென்ற போது, ஒரு மோட்டார் சைக்கிளை 3 பேர், வந்தனர்.
திடீரென்று முருகேசனை தாக்கி பேக்கை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்த முருகேசன் நகைகளை கொண்ட பையை விடாமல் பிடித்து கொண்டு காரில் ஏறி தம்பி சென்று விட்டார்.
டிரைவர் சாமர்த்தியத்தால் இந்த கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது. முருகேசன் வைத்து இருந்த பையில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருந்ததாக கூறப்பட்டது.
இது குறித்து முருகேசன் தனது கடை உரிமையாளரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து நகை வியாபாரிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா ? என விசாரணை நடத்தினர்.
இதில் நகைகளை கொள்ளை அடித்த நெல்லையை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 22) என தெரியவந்தது. அவர்களை உக்கடம் போலீசார் கைது செய்தனர்.

0 கருத்துகள்: