கோவை சிறுமி கொலை வழக்கு : 2-வது குற்றவாளி மோகன்ராஜ் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் !!!
தமிழகத்தையே உலுக்கிய கோவை சூலூர் கண்ணம்பாளையம் 10 வயது சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக, இரண்டாவது முக்கியக் குற்றவாளியைச் சூலூர் போலீஸார் கைது செய்து, தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸார், குற்றவாளியைக் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அதிரடி உத்தரவைப் பிறப்பித்து உள்ளார்.
கோவை, சூலூரில் பிஞ்சுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டு குளக்கரையில் வீசப்பட்ட சம்பவம் கொங்கு மண்டலம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சூலூர் போலீஸார், குற்றவாளிகளை கைது செய்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து,
இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தப்ப முயன்ற போது பாலத்தில் இருந்து கீழே விழுந்து கார்த்திக் கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை சுற்றி 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஏதேனும் அவசர நிலை அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட இரண்டாவது குற்றவாளி மோகன்ராஜிடம் இரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்பொழுது அவர் சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு, குற்றவாளி நீதிமன்றக் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி அருண்குமார், குற்றவாளி மோகன்ராஜை வருகின்ற மே 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு (Remand) உட்படுத்தி உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி மோகன்ராஜ் கோவை மத்தியச் சிறைக்குக் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையின் (Post-mortem report) அடிப்படையில், இந்த வழக்கை "போக்சோ" (POCSO) சட்டத்தின் கீழ் இன்னும் காவல்துறையினர் பலப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்: