வியாழன், 28 மே, 2026

மோடி தர்ற ரூ.3,000 வாங்கி தர்றேன்": 70 வயது பாட்டியிடம் நைசாக பேசி கம்மல், டாலர் பறிப்பு !!!

SHARE

 மோடி தர்ற ரூ.3,000 வாங்கி தர்றேன்": 70 வயது பாட்டியிடம் நைசாக பேசி கம்மல், டாலர் பறிப்பு !!!

கோவையில் "மோடி ஓல்டு ஏஜ் ஃபண்ட்" பணம் ரூ.3,000 வாங்கித் தருவதாகக் கூறி, 70 வயது மூதாட்டியிடம் இருந்து 3/4 பவுன் கம்மல் மற்றும் டாலரை அசிஸ்டெண்ட் போல நடித்து நைசாக பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.  

கோவை ராமநாதபுரம், கிருஷ்ணர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (70), காசியப்பன் மனைவி. இவர் கடந்த மார்ச் 3-ந் தேதி காலை ராமநாதபுரம் சிக்னல் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த மர்ம நபர் ஒருவர், கஸ்தூரியிடம் பாசமாக பேசினார். "உங்களுக்கு மோடி அரசாங்கத்தின் முதியோர் உதவித் தொகை ரூ.3,000 வாங்கித் தருகிறேன், என்னுடன் வாருங்கள்" என கூறி தனது டூவீலரில் ஏற்றிச் சென்றார். அவரை ஐயர் மருத்துவமனை அருகே அழைத்துச் சென்ற அந்த நபர், "அதிகாரிகள் பார்க்கும் போது காதில் நகை இருக்கக் கூடாது, அப்போது தான் பணம் ஒப்புதல் ஆகும். கம்மலையும், டாலரையும் கழட்டி வையுங்கள்" எனக் கூறினார். அதை நம்பிய கஸ்தூரி நகைகளைக் கழட்டி தனது பர்சில் வைத்தார். 

உடனே அந்த நபர், "பாட்டி பர்ஸ் தொலைந்துவிடும், நான் பத்திரமாக வைத்து உள்ளேன்" என்று நகைகளை வாங்கிக் கொண்டு, "இதோ ஜெராக்ஸ் எடுத்து விட்டு வருகிறேன்" என்று கூறிச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: