பைக் திருடிய சிவகங்கை, விருதுநகர் வாலிபர்கள் 4 பேர் கைது: பைக் பறிமுதல் !!!
கோவை, கவுண்டம்பாளையம், மேரு நகர், அசோக் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (26). இவர் தனது பைக்கை கடந்த 13-ந் தேதி பழுது பார்ப்பதற்காக கர்ணா என்பவரிடம் கொடுத்து இருந்தார். கர்ணா அந்த பைக்கை ரத்தினபுரி கண்ணப்பா நகர் 4-வது வீதியில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்றார். கடந்த 17-ந் தேதி இரவு அவர் வந்து பார்த்த போது பைக் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரேம்குமார் கொடுத்த புகாரின் பேரில், சி4 ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக்கை திருடியது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த வீரமணிகண்டன் (21), சூர்யபிரசாத் (21), சுதர்சன் (21) மற்றும் விருதுநகர் அரசகுலத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் (18) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.80,000 மதிப்பு உள்ள மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்: