செவ்வாய், 19 மே, 2026

கோவை, நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு : ​இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேருக்கு வலை ? - உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை !!!

SHARE

 கோவை, நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு : ​இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேருக்கு வலை ? - உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை !!!

​ கோவை, சூலூர் அடுத்த நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பகீரையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

​கோவை நீலாம்பூர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக நீலாம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீலாம்பூர் போலீசார் உயிரிழந்த நபரின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இறந்த நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்ற விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

​போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில், இந்த மரணத்தின் பின்னணியில் நள்ளிரவில் நடந்த ஒரு தாக்குதல் இருக்கலாம் என்ற தகவல் கிடைத்து உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில், கொலை நடந்த அந்தப் பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் (டூவிலர்) வந்த மூன்று பேர், ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

அந்த மூன்று பேருக்குள் ஏற்பட்ட போதை அல்லது பணத் தகராறு காரணமாக, இரண்டு பேர் சேர்ந்து இந்த வாலிபரைக் கொடூரமாக அடித்துக் கொலை செய்து விட்டு, சடலத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

​இந்தச் சம்பவம் தொடர்பாக நீலாம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அச்சங்குளம் மற்றும் நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

நேற்று இரவு சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய இருசக்கர வாகன எண்களைக் கொண்டு, கொலையாளிகளைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: