வியாழன், 28 மே, 2026

கோர்ட் வளாகத்தில் கணவருக்கு கொலை மிரட்டல்: வடமாநில மைத்துனர்கள் 3 பேர் மீது வழக்கு !!!

SHARE

 கோர்ட் வளாகத்தில் கணவருக்கு கொலை மிரட்டல்: வடமாநில மைத்துனர்கள் 3 பேர் மீது வழக்கு !!!

கோவை ஆர்.எஸ்.புரம், பி.எம்.சாமி காலனி, பகுதியில் வசித்து வருபவர் முகேஷ் சஞ்ஜோதி (43). இவருக்கும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த சியா சஞ்ஜோதி என்பவருக்கும் கடந்த 21.11.2008 அன்று திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த ஏப்ரல் 27-ந் தேதி முகேஷ் சஞ்ஜோதி ராய்ப்பூர் கோர்ட்டிற்கு சென்று இருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது மனைவியின் சகோதரர்களான முகேஷ் சஞ்ஜோதி, அமித் கோலிசா, பெருமாள் கொட்டாடியா ஆகிய 3 பேரும் முகேஷை வழிமறித்து தகராறு செய்தனர்.  

"எங்கள் தங்கைக்கு கூடுதலாக ரூ.5 கோடி நஷ்டஈடு தரவேண்டும். இல்லையென்றால் உன்னை இங்கிருந்து உயிரோடு விடமாட்டோம், வெட்டி கொன்று விடுவோம்" என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன முகேஷ் கோவைக்கு திரும்பினார். அதன் பின்னரும் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.  

இதுகுறித்து முகேஷ் சஞ்ஜோதி கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மிரட்டல் விடுத்த வடமாநில மைத்துனர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: