திங்கள், 18 மே, 2026

கோவை, அவிநாசி சாலை அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த 4.5 அடி 'ராட்சத' கண்ணாடி விரியன் ; உயிர்க்கொல்லி நச்சுப் பாம்பை லாவகமாக மீட்ட பாம்பு பிடி வீரர் !!!

SHARE

 கோவை, அவிநாசி சாலை அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த 4.5 அடி 'ராட்சத' கண்ணாடி விரியன் ; உயிர்க்கொல்லி நச்சுப் பாம்பை லாவகமாக மீட்ட பாம்பு பிடி வீரர் !!!

 கோவை அவிநாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் புகுந்த, அதீத நச்சுத்தன்மை வாய்ந்த 4.5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பாம்பு பிடி வீரர் கௌதம் மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தார்.

கோவை மாநகரின் மிக முக்கியப் பகுதியான அவிநாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் (Apartments) அமைந்து உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில், நேற்று இரவு குடியிருப்பு வளாகத்திற்கு அருகே நச்சுப் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நெருங்கிச் சென்று பார்த்த போது, அது இந்தியாவின் மிகக் கொடிய ‘பிக் ஃபோர்’ (Big Four) நச்சுப் பாம்புகளில் ஒன்றான கண்ணாடி விரியன் (Russell's Viper) என்பது தெரியவந்தது. சுமார் 4.5 அடி நீளத்துடன், ஆக்ரோஷமாகச் சீறிக் கொண்டு இருந்த அந்த பாம்பைக் கண்டு குடியிருப்புவாசிகள் உடனடியாகபாம்பு பிடி வீரர் கௌதமிற்குத் தகவல் கொடுத்தனர். 

தகவல் கிடைத்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கௌதம், பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாகப் பிடித்துப் பைக்குள் அடைத்தார்.

மீட்கப்பட்ட 4.5 அடி ராட்சத கண்ணாடி விரியன் பாம்பு, பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

"தற்போது கோடைக் காலம் மற்றும் திடீர் மழை காரணமாகப் பாம்புகள் குளுமையான இடங்களைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் பாம்புகளைக் கண்டால் பயந்து அவற்றை அடிக்க முற்பட வேண்டாம். உடனடியாக வனத் துறைக்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மீட்பு குழுவினருக்கோ தகவல் தெரிவியுங்கள்" எனப் பாம்பு பிடி வீரர் கௌதம் கூறினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: