திங்கள், 18 மே, 2026

கரடுமுரடான மேடுபள்ளங்களில் சீறிப்பாய்ந்த பைக் சாகச வீரர்கள்- உற்சாகமடைந்த கோவை மக்கள்...

SHARE

கரடுமுரடான மேடு பள்ளங்களில் சீறிப்பாய்ந்த பைக் சாகச வீரர்கள்- உற்சாகமடைந்த கோவை மக்கள்...

பிரபல நிறுவனமான MRF நிறுவனம் ஆண்டுதோறும் Off Road பந்தயங்களை நடத்தி வருகிறது. கரடுமேடு பள்ளங்கள் நிறைந்த பாதைகளை உருவாக்கி அதில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் சிறுவர்கள் இளைஞர்கள் என பலரும் இந்தப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று கோவை கொடிசியா மைதானத்தில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதற்காகவே மேடுபள்ளங்கள், சரிவுகள், குறுகிய வளைவுகள் கொண்ட கரடுமுரடான பாதைகள் வடிவமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பைக் சாகச வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சிறுவர்களும் சிறுமிகளும் இப்போட்டியில் பங்கேற்றனர். 

போட்டியில் சாக வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு மேடு பள்ளங்களில் சீறிப்பாய்ந்து சென்றது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இந்த போட்டியை பார்வையாளர்கள் காண்பதற்கு பிரத்தியேகமாக இட வசதிகளும் செய்யப்பட்டிருந்ததால் குடும்பத்துடன் வந்திருந்த பார்வையாளர்கள் உற்சாகமாக பைக் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். குறிப்பாக குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் வியப்புடனும் இந்த பைக் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். 

பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு பரிசுகள் பரிசுத் தொகைகள் ஆகியவை வழங்கப்படும்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: