வெள்ளி, 22 மே, 2026

50 லட்சம் கொடு, இல்லையேல் உல்லாசமாக இரு ; கோவையில் தி.மு.க அணி நிர்வாகி உட்பட தோழிகள் 3 பேரின் மிரட்டல் - கதறிய தாய் !!!

SHARE

 50 லட்சம் கொடு, இல்லையேல் உல்லாசமாக இரு ; கோவையில் தி.மு.க அணி நிர்வாகி உட்பட தோழிகள் 3 பேரின் மிரட்டல் - கதறிய தாய் !!!

மாநகர காவல் ஆணையரிடம் தம்பதி தஞ்சம் : பழைய வழக்கை வைத்து ‘பிளாக்மெயில்’ செய்து கொலை மிரட்டல் விடுத்த கும்பல் !!!

தனது சூல்நிலையை பயண்படுத்தி தன்னிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டும் தனது, முன்னாள் தோழிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்க பட்ட பெண் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்து உள்ளார்.

கோவை மாவட்டம் காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் தன்யா - 35. இவரது கணவர் பெயர் கருணாநிதி. இவர் புகைப்பட தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் கணவன் - மனைவி இருவரும் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கணவன் - மனைவி இருவரும் கூறியதாவது..

எங்களுக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், சுய தொழில் செய்ய வேண்டும் என கூறி, கடந்த 2022 ம் ஆண்டு தனது நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். இதனை திரும்ப செலுத்த முடியாததால் நண்பர்கள் என் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் தன் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்காக நீதிமன்ற பிணையும் தான் பெற்று உள்ளதாகவும். இந்த நிலையில் தனது சூல்நிலையை புரிந்து கொண்ட, மசக்காளிபாளையத்தை சேர்ந்த தி.மு.க மகளீரணி நிர்வாகி கலைச்செல்வி - 35, வடவள்ளியை சேர்ந்த தி.மு.க நிர்வாகி சங்கீதா 35, ஆனைமலையை சேர்ந்த சந்தியா 27, இவர்கள் மூவரும் என்னிடம் நன்றாக தோழி யாக பழகி தனது சூல்நிலையை வைத்து, தன்னிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டி வருகின்றதாகவும், இவர்களுடன் மணிகண்டன் என்ற நபரும் சேர்ந்து கொண்டு 2022ம் ஆண்டு தன் மீது பதியபட்டு உள்ள வழக்கை எனது புகைபடத்துடன் இணைத்து தினசரி நாளிதழில் விளம்பரப்படுத்தி என்னை அசிங்க படுத்துகின்றனர். 

மேலும் நேற்று இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணம் கேட்டு மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். எங்களுக்கு பணம் கொடு, இல்லை என்றால் நாங்கள் கூறுகின்ற நபருடன் உல்லாசமாக இரு எங்களுக்கு எதாவது ஒன்று தேவை என மிரட்டி வருகின்றனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்து உள்ளதாக தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: