கோவையில் பல்வேறு இடங்களில் அனாதையாக கிடந்த 70 மோட்டார் சைக்கிள்கள் ; கைப்பற்றிய போலீசார் - உரிமையாளர்கள் விபரம் குறித்து விசாரணை !!!
கோவை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் யாராலும் உரிமை கோரப்படாமல் அனாதையாக கடந்த மோட்டார் சைக்கிள் போலீசார் கைப்பற்றி வருகின்றனர். அந்த வகையில் சாய்பாபா காலனி வாட்டர் டேங்க் அருகில் துடியலூர் சந்தைப்பேட்டை அருகில் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் என 70 மோட்டார் சைக்கிள்கள் யாராலும் உரிமை கோரப்படாத நிலையில் அனாதையாக கிடந்தது.
நீண்ட நாட்களாக அனாதையாக கிடந்த மோட்டார் சைக்கிள்கள் குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, மற்றும் துடியலூர் போலீசார் அங்கு சென்று அனாதையாக கிடந்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றினர்.
இவை அனைத்தும் கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் என தெரியவந்து உள்ளது.
இந்த வாகனங்களில் உரிமையாளர்கள் யார் ? இந்த மோட்டார் சைக்கிள் திருடர்களால் திருடப்பட்டு அனாதையாக விடப்பட்டு உள்ளதா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

0 கருத்துகள்: