சனி, 16 மே, 2026

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை ; மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி பலி !!!

SHARE

 கோவை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை ; மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி பலி !!!

கோவை மாவட்டம், அன்னூர், துடியலூர் பகுதிகளின் கன மழை பெய்தது. அப்பொழுது மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கோவை மாவட்டம், துடியலூர், குப்பநாயக்கன்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம், கஸ்தூரி பாளையம், கவுண்டம்பாளையம், ஜி.என் மில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வடமதுரையில் இருந்து பன்னீர்மடை செல்லும் சாலை உட்பட பல முக்கிய சாலைகள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் குப்பநாயக்கன்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம், சுல்தானிபுரம், எஸ்.கே.வி நகர், நால்வர் நகர், கஸ்தூரி நாயக்கன்பாளையம், சோமியம்பாளையம் ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஊராட்சி அலுவலகம் பின்புறம் ஆறு மின் கம்பங்கள் சேதமடைந்தது. இதனால் மின் கம்பிகள் அருந்தன. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டதால், அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதே போல் வால்பாறை பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், பத்ரா பகுதியைச் சேர்ந்தவர் ராம் வாலி கேவாட். இவர் கோவை அடுத்த காரமடை, அன்னூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் தங்கி பணி புரிந்து வருகிறார். இவருடைய மகன் அஜிட்குமார் வயது 20, இவர் அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மாசாண்டிபாளையத்தில் உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தில் கடந்த 15 நாட்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை 6:00 மணி அளவில் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. அப்பொழுது குளிர்பான நிறுவனத்தில் சோடா பாட்டில்களை அஜிட்குமார் கழுவிக் கொண்டு இருந்தார். இதற்கு இடையே திடீரென மின்னல் தாக்கியதில் அஜிட்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அதை பார்த்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அஜிட்குமாரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்து மருத்துவர்கள் அஜிட்குமார் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: