வியாழன், 21 மே, 2026

கோவையில் பெயிண்டரை அடித்துக் கொன்ற மனைவி - மது போதையில் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் !!!

SHARE

 கோவையில் பெயிண்டரை அடித்துக் கொன்ற மனைவி - மது போதையில் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் !!!

கோவைய அருகே மது போதையில் தகராறு ஈடுபட்டதால் பெயிண்டரை மனைவி அடித்து கொலை செய்தார்.

கோவை தடாகம் அருகே உள்ள சோமையனூரை சேர்ந்தவர் கார்த்திக் பெயிண்டர். இவருடைய மனைவி ரேவதி, இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரேவதி வீட்டு வேலை செய்து வந்தார். கார்த்திக் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்து உள்ளார். மேலும் சரிவர வேலைக்குச் செல்லாமல், மது குடிப்பதற்காக ரேவதி இடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டையிட்டு உள்ளார்.

 இந்நிலையில் ரேவதி நேற்று முன்தினம் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியதும், கார்த்திக் அவரிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு உள்ளார். அப்பொழுது அவர் தன்னிடம் இருந்த ரூபாய் 200 கொடுத்து உள்ளார். பின்னர் மீண்டும் இரவு 7 மணிக்கு வந்து மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து உள்ளார். அப்பொழுது பணம் கொடுத்து அனுப்பி உள்ளார்.

தொடர்ந்து மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், ரேவதிக்கு மனவருத்தம் ஏற்பட்டது. இரவு 9:45 மணிக்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கார்த்திக் மனைவியுடன் தகராறு ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ரேவதி கார்த்திக்கை பிடித்து கீழே தள்ளி பருப்பை கடைவதற்கு பயன்படுத்தப்படும் கட்டையால் சரா மாறியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் கார்த்திக் தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் கார்த்திக் மயங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரேவதி உடனடியாக உறவினர்கள் தவமணி என்பதற்கு தகவல் கொடுத்தார். அவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்ததில் கார்த்திகேயன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கட்டையால் அடித்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தடாகம் போலீஸ் நிலைய ஆய்வாளர் சித்ரா மற்றும் போலீசார் பெயிண்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரேவதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால், கணவனை - மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை இறந்ததாலும் தாய் சிறைக்குச் சென்றதாலும், 12 வயது மகனும், 9 வயது மகளும் கவனிக்க யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது அந்த கிராம மக்கள் மத்தியில் சோகத்தில் ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: