ஒற்றை யானை தாக்கி அலறி அடித்து ஓடிய உக்ரைன் நாட்டு விஐபி; கோவையில் பைக் பயணத்தில் நேர்ந்த பயங்கரம் !!!
93 நாடுகள் சுற்றிய உலகப் பயணிக்கு கோவையில் காத்திருந்த ‘திகில்’ கிளைமாக்ஸ்: பள்ளத்தில் விழுந்து படுகாயம்!
உக்ரைன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி எடிஸ்லாவ் லியன் (38) நேற்று காலை ஆனைகட்டி அருகே மோட்டார் பைக்கில் வந்து கொண்டு இருந்தார். மாங்கரை சலங்கை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது சாலையின் ஓரத் தில் மோட்டர் பைக்கை நிறுத்தி விட்டு அருகில் இருந்த காட்டுப்பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக சென்று உள்ளார்.
அப்போது, ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று அங்கு வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த சுற்றுலா பயணி வேகமாக ஓடி உள்ளார். சிறிது சிறிது தூரம் அவரை துரத்தி சென்ற காட்டு யானை திரும்பி சென்று விட்டது. இந்நிலையில் உயிருக்கு பயந்து ஓடிய வெளிநாட்டு சுற் றுலா பயணி கால் தடுக்கி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து உள்ளார்.
அதில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இவருடைய அலறல் சத்தம் கேட்டு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
யானை துரத்தியதில் காயம் அடைந்த உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணி 93 நாடுகளுக்கு செல்வதற்காக உரிமம் பெற்று உள்ள தாகவும்,கேரளா வந்த அவர் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு வாடகை பைக் மூலம் ஆனைகட்டி, மாங்கரை வழியாக ஊட்டி செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிகிறது.
இதற்கு இடையே அதே பகுதியில் வனப்பகுதிக் குள் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானையை அங்கு இருந்த சிலர் வீடியோ எடுத்து உள்ளனர்.அந்த யானை துரத்தியதால் தான் சுற்றுலா பயணி காயம் அடைந்ததாக சமூக வலைத் தளங்களில் வீடியோ வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

0 கருத்துகள்: