வெள்ளி, 29 மே, 2026

த.வெ.க வில் இணைந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் !!!

SHARE

 த.வெ.க வில் இணைந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் !!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று தங்களை இணைத்து கொண்டனர்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 47 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் அ.தி.மு.க பெரும் பின்னடைவைச் சந்தித்து இருந்த நிலையில் கட்சி தலைமை மீது அதிருப்தி காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டனர்.

கடந்த மே 13- ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த த.வெ.க அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்து இருந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர். அத்துடன், அ.தி.மு.க கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க வின் இருதரப்பினரும் மாறி மாறி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து மனு அளித்து இருந்தனர்.

இதனால் அ.தி.மு.க வில் பிளவு ஏற்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், தேர்தல் தோல்விக் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இ.பி.எஸ்- க்கு கோரிக்கையை முன் வைத்து இருந்தது. இந்த சூழலில் அ.தி.மு.க வின் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், ஜே.சி.டி.பிரபாகரிடம்

அ.தி.மு.க எம்.எல்.ஏ க்களின் ராஜினாமாவால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி ஆகிய இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான முடிவு செய்து சபாநாயகரிடம் தாங்கள் அளித்த கடிதத்தைத் திரும்பப் பெற்றனர். அத்துடன், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க வில் நிலவிய உட்கட்சி பூசல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து உள்ளது. எனினும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

இந்த சூழலில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் த.வெ.க வில் இணையும் நிகழ்ச்சி இன்று (மே 28) நடைபெற்றது. த.வெ.க பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், வெங்கடரமணன், விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அண்ணா தொழிற்சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் இணைத்துக் கொண்டனர்.

அ.தி.மு.க வினரை த.வெ.க வின் துண்டை அணிவித்து அமைச்சர்கள் வரவேற்றனர். அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து த.வெ.க வில் இணைவதால் அ.தி.மு.க தலைமை கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.

இதனிடையே, திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: