வெள்ளி, 29 மே, 2026

மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை !!!

SHARE

 மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை !!!

பெட்ரோல் டீசல் விலையானது கடந்த 20 நாட்களில் இன்று 7வது முறையாக அதிகரித்து இருக்கிறது. அதன்படி, இன்று சென்னையில் பெட்ரோலுக்கு 24 பைசாவும், டீசலுக்கு 23 பைசாவும் உயர்ந்து உள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கச்சா எண்ணெயை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிற இந்தியா போன்ற நாடுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன.

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி விலையானது அதிகரித்து வருகிறது. இந்த மாதம் 15 ஆம் தேதியில் இருந்து அதிகரிக்கத் தொடங்கிய விலையானது இன்றுடன் 6வது முறையாக அதிகரித்து இருக்கிறது.

மே 27 ஆம் தேதி சென்னையில் பெட்ரோலுக்கு 33 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.108.20க்கும், டீசலுக்கு 32 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.99.98 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று பெட்ரோலுக்கு 43 பைசாவும், டீசலுக்கு 43 பைசாவும் குறைந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் பெட்ரோலுக்கு 24 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 108 க்கும், டீசலுக்கு 23 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.99.78 க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: