உடைந்த அ.தி.மு.க... கொறடா பதவிக்கு கடும் போட்டி - சபாநாயகருடன் அமைச்சர் செங்கோட்டையன் ‘திடீர்’ ரகசிய சந்திப்பு !!!
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-வுக்கு ஆதரவளித்த எல்.எல்.ஏ-க்கள்; இ.பி.எஸ் அதிரடி நீக்கத்திற்குப் பின் சட்டசபையில் பரபரப்பு!!!
அ.தி.மு.க வில் உள்கட்சி மோதல் நிலவும் சூழலில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து உள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக த.வெ.க தலைவர் ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மே 13 ஆம் தேதிக்கு உள்ளாக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி த.வெ.க அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, தி.மு.க மற்றும் தே.மு.தி.க வெளிநடப்பு செய்த நிலையில், வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ, ஐ.யு.எம்.எல் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரித்தனர். பா.ம.க, பா.ஜ.க நடுநிலை வகித்தது.
இதுபோன்ற சூழலில், இரண்டாகப் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க வில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ க்கள் விஜய்க்கு எதிராகவும், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி பக்கம் உள்ள ஆதரவு எம்.எல்.ஏ க்கள் 25 பேர் ஆதரவாகவும் வாக்கு அளித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிசாமி த.வெ.க வுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து உறுப்பினர்களையும் அ.தி.மு.க வின் அடிப்படை பதவிகளில் இருந்து நீக்கினார்.
ஏனென்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அ.தி.மு.க, எதிர்க்கட்சியில் இருந்து 3 ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், அக்கட்சியில் விரிசல் விழ ஆரம்பித்தது. இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், இ.பி.எஸ் மற்றும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் என கட்சி இரண்டாக உடைந்தது.
இதுபோன்ற சூழலில் தான், த.வெ.க விற்கு ஆதரவாக அ.தி.மு.க வினர் யாரும் வாக்களிக்கக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார். ஆனால், அதையும் மீறி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ க்கள் ஆதரவு தெரிவித்ததால், அ.தி.மு.க வினர் இடையே பெரும் பூதாகரம் வெடித்து உள்ளது.
இதனால், அ.தி.மு.க வின் கொறடா எடப்பாடி அணியில் தான் போட வேண்டுமென்று ஒரு தரப்பும், சி.வி.சண்முகம் தரப்பில் தான் போட வேண்டுமென மற்றொரு தரப்பும் சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளனர். அந்த மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் சபாநாயகர் ஜே.சி.பி பிரபாகர் தெரிவித்து இருந்தார்.
இப்படி அ.தி.மு.க விற்குள் உட்கட்சி பூசல் நிலவும் சூழலில், சபாநாயகர் ஜே.சி.பி பிரபாகரை நிதியமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்து உள்ளார். அ.தி.மு.க பிரச்சனைக்கு நடுவே, இந்த சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சபாநாயகர் செங்கோட்டையன் சந்திப்பிற்குப் பிறகு, அ.தி.மு.க இரு பிரிவுகளின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, அடுத்த மாதம் ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு என்பது சுமார் 15 நிமிடங்கள் நீடித்து உள்ளது.

0 கருத்துகள்: