வெள்ளி, 15 மே, 2026

அ.தி.மு.க விரைவில் ஒன்று சேரும் ; கோவை விமான நிலையத்தில் எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்ட்டின் பேட்டி !!!

SHARE

 அ.தி.மு.க விரைவில் ஒன்று சேரும் ; கோவை விமான நிலையத்தில் எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்ட்டின் பேட்டி !!!

​முதல்வர் விஜய்யின் 'புதுமைப் பெண்' திட்டத்திற்குப் பாராட்டு; 717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்குப் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு !!!

கோவை விமான நிலையத்தில் திருச்சி லால்குடி அ.தி.மு.க எம்.எல்.ஏ லீமா ரோஸ் மாட்டினுக்கு உறவினர்கள் மாலை அணிவித்தும்,சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்..

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது ;-

தமிழ்நாட்டின் முன்னேற்றம் தொகுதி வளர்ச்சிக்காக கூட்டணி இணைந்ததாகவும் 

புதுமை பெண் திட்டத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல்வர் விஜய் கொடுத்து உள்ளார், சிங்க பெண் திட்டத்தை வரவேற்பதாகும்

மகளிர் குடும்பத் தொகையை தொடர்ந்து ஆயிரம் வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும்

குறிப்பாக 717 மதுபானக் கடைகள் மூடியது குடும்ப பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது எனவும்

அ.தி.மு.க "வில் அனைவரும் ஒருங்கிணைக்க வேலை நடைபெற்று வருகிறது விரைவில் அனைவரும் ஒருங்கிணைவார்கள் என இவ்வாறு தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: