வியாழன், 28 மே, 2026

ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டி உடல்நலக்குறைவால் பரிதாப பலி !!!

SHARE

 ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டி உடல்நலக்குறைவால் பரிதாப பலி !!!

கோவை சாயிபாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு, செர்மன்ராஜ் நகரைச் சேர்ந்த ஜோதிமணி (43) என்பவரது வீட்டில் கஸ்தூரி (75) என்ற மூதாட்டி வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவரை இவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கைவிட்டு விட்டனர். இதனால் அவர் அருகில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் பிச்சை எடுத்து தனது வாழ்வாதாரத்தை கவனித்து வந்தார்.  

வயது முதிர்வு காரணமாக கடந்த 3 நாட்களாக கஸ்தூரிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அவரது அறையில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் கிடந்ததை பக்கத்து வீட்டுக்காரரான சித்ரா பார்த்து ஜோதிமணிக்கு தகவல் கொடுத்தார். பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர், கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சாயிபாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: